மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மாணவர்களின் படைப்புகளை "மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)" என்ற நூலாக புலவர்.சிவகுமார் அவர்கள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க இந்நூலினை தம் சொந்த செலவில் வெளியிட்டார்.
படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் சமுதாய மாற்றம் தேடியுள்ளனர். எனினும் இளம் பருவத்தில் சமூகச் சிந்தனை தோன்றுவது என்பது அரிதான செயல்தான். நூலில் இடம் பெற்றுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் சமூக சிந்தனை,மக்கள் புரட்சி , கல்விச் சிந்தனைகள் , சமுதாய மாற்றம் போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றமும், பெருந்தன்மை மாத இதழும் நடத்துகின்ற போட்டிகளின் கட்டுரைகளையும் ஆய்வரங்கு நிகழ்வில் தந்த ஆய்வு ஏடுகளையும் அச்சிட்டுக் கொடுக்க உறுதுணையாக நிற்கிறோம். தமிழ் சமுதாயம் இதனை வரவேற்று ஊக்கமும்,ஆக்கமும் நல்குவார்கள் என்றே நம்புகிறோம்.
"எல்லாப் புகழும் என் தாய் தமிழுக்கே!"

Comments
Post a Comment