ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெ .வெங்கடராமன் வெளியிட பெருந்தன்மை இதழாசிரியர் ப.சிவகுமார் பெற்றுக்கொண்டார் உடன் பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் பேராசிரியர் க.அழகர்
சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இலக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இலக்கிய ஆய்வை பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வரல்களின் ஆய்வுகளின் பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது.
சமூக மாற்றம் தேடும் மக்களின் உள்ளத்தை படம்பிடிக்க , இருபதாம் நூற்றாண்டில் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றம் பேராசிரியர் முனைவர் க.அழகர் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் புலவர் ப.சிவகுமார் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் மிடாலக் கவிஞர் பொன்.செல்வராசு அவர்களும், ஆய்வு மேலாண்மை ஆங்கில பேராசிரியர் முனைவர் து.ஜெயலட்சுமி அவர்களும் ஆய்வாளர்களை அழைத்து கட்டுரைகளைச் சமர்பிக்கச்செய்து அழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை மேன்மை அடையச் செய்ய முயன்று வரும் அறிஞர் பெருமக்களை பாராட்ட நினைத்தோம்.
ஆறாம் தேசிய தமிழ் கருதரங்கம் நூல் வடிவில்
சங்க காலச் சமுதாய வாழ்வியல் நெறிகள்,கற்பின் சிறப்புகள், தொழில் துரையின் மேம்பாடுகள், பண்பாட்டு மூலங்கள் யாவற்றயும் உருவாக்கி தருவதற்காக இந்த ஆய்வுக்களம் எடுத்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது. சங்க காலத்திற்கு ஏற்ற அறிவு நிலையில் செய்யுட்கள் அமைவு பெற்றாலும் இக்கால வாழ்வியலுடன் ஒன்றிணைந்துள்ளது என்பதை இக்கால ஆய்வாளர்களின் கட்டுரை வழியே அறிய முடிகிறது.
இலக்கியம் என்பது எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பயன்தரும் ஒரு மூலிகைச் செடியாகும். அச்செடிகளை இன்று நாம் அழித்துக்கொண்டு வருகிறோம். பெருந்தமை தமிழாய்வு மன்றம் அச்செடியை உருவாக்க பண்படுத்தும் ஆய்வாளர்களை கண்டு அவர்களை கொண்டு மீண்டும் அச்செடியை உருவாக்க முனைந்துள்ளது. நடுவு நிலையில் நின்று ஆய்வு செய்த ஆய்வாளர்களின் கருத்துக் கருவூலத்தை நூலாக்கிய பெருமையோடு தாய் தமிழை வணங்குகிறோம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

Comments
Post a Comment