கவிஞர்.சத்யா அவர்கள் எழுதிய "அவனுக்கென்றோர் மனம்" என்ற கவிதை நூலை 18.04.2010ஆம் ஆண்டு கவிஞன் பதிப்பகம் வெளியிட்டது. இவ்விழாவானது இராஜபாளையத்தில் உள்ள மரக்கன்னு செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நூலினை மூதறிஞர் நல்லாசிரியர் திரு.கொன்றையாண்டி அவர்கள் வெளியிட அதனை அந்நூலாசிரியர் கவிஞர்.சத்யா அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் திருமண மண்டப உரிமையாளர் தேன்மொழி, வீனஸ் கம்ப்யூட்டர் நிறுவனர், கவிஞன் பதிப்பக உரிமையாளர் சிவகுமார் கலந்துகொண்டனர்.
ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெ .வெங்கடராமன் வெளியிட பெருந்தன்மை இதழாசிரியர் ப.சிவகுமார் பெற்றுக்கொண்டார் உடன் பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் பேராசிரியர் க.அழகர் சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இலக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இலக்கிய ஆய்வை பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வரல்களின் ஆய்வுகளின் பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது. சமூக மாற்றம் தேடும் மக்களின் உள்ளத்தை படம்பிடிக்க , இருபதாம் நூற்றாண்டில் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றம் பேராசிரியர் முனைவர் க.அழகர் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் புலவர் ப.சிவகுமார் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் மிடாலக் கவிஞர் பொன்.செல்வராசு அவர்களும், ஆய்வு மேலாண்மை ஆங்கில பேராசிரியர் முனைவர் து.ஜெயலட்சுமி அவர்களும் ஆய்வாளர்களை அழைத்து கட்டுரைகளைச் சமர்பிக்கச்செய்து அழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை மேன்மை அடையச் செய்ய முயன்று வரும் அறிஞர் பெருமக்களை பாராட்ட நினைத்தோம். ...
Comments
Post a Comment