Skip to main content

உழவர் பிள்ளைத்தமிழ் - சிற்றிலக்கிய நூல் வெளியீட்டு விழா

 


புலவர் ப.சிவகுமார் அவர்கள் எழுதிய 'உழவர் பிள்ளைத்தமிழ்' சிற்றிலக்கிய  நூல் வெளியீட்டு விழா 26.04.2025 அன்று அரசு பொதுநூலகம்  இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நூலை திரு.பெரி.சந்திரசேகர்(UCO வங்கி முதுநிலை மேலாளர்) வெளியிட அதனை திரு.எஸ்.ஆதிநாராயணன் (மேனாள் துணை ஆட்சி தலைவர்) பெற்றுக்கொண்டார். திரு.சுப்பிரமணியன் (சாலியர் மலர் ஆசிரியர்) முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞன் பதிப்பகம். 

Comments

Popular posts from this blog

சங்க இலக்கியத்தில் ஓர் அகழ்வாய்வு - ஆறாம் தேசிய தமிழ் கருதரங்கம்

ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெ .வெங்கடராமன் வெளியிட பெருந்தன்மை இதழாசிரியர் ப.சிவகுமார் பெற்றுக்கொண்டார்  உடன் பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் பேராசிரியர் க.அழகர்  சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இலக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இலக்கிய ஆய்வை பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வரல்களின் ஆய்வுகளின் பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது. சமூக மாற்றம் தேடும் மக்களின் உள்ளத்தை படம்பிடிக்க , இருபதாம் நூற்றாண்டில் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றம் பேராசிரியர் முனைவர் க.அழகர் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் புலவர் ப.சிவகுமார் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் மிடாலக் கவிஞர் பொன்.செல்வராசு அவர்களும், ஆய்வு மேலாண்மை ஆங்கில பேராசிரியர் முனைவர் து.ஜெயலட்சுமி அவர்களும் ஆய்வாளர்களை அழைத்து கட்டுரைகளைச் சமர்பிக்கச்செய்து அழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை மேன்மை அடையச் செய்ய முயன்று வரும் அறிஞர் பெருமக்களை  பாராட்ட  நினைத்தோம்.                       ...

இலக்கிய புதுமைகள் - ஐந்தாம் கருத்தரங்கம்

  தொழில் அதிபர் ராஜா அவர்கள் (இடது) மிடலாக் கவிஞர் பொன் செல்வராஜ் (வலது) அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். அகநானூறு காட்டும் தமிழ் மாந்தர்களின்  வாழ்வியல் , அறம் ,பொருள், இன்பம், அன்பு நெறி,  அஃறினை  உயிர்களின் மீது அன்பு செலுத்துதல், காதல்,வீரம் போன்றவற்றை ஆய்வு செய்து வழங்கிய இருபது ஆய்வாளர்களின் முத்தான ஆய்வுகளை முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றத்தில் படைத்தனர். விழாவிற்கு வாழ்த்துரையை திருவில்லிபுத்தூர்   மாவட்ட கல்வி அலுவலர் அ .விஷ்ணுதாஸ் அவர்கள் வழங்கினார். ஐந்தாம் கருத்தரங்கம்   நூல் வடிவில்

மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)

மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மாணவர்களின் படைப்புகளை  "மாரியாய் மாறிய பனித்துளி (பன்முக நோக்கு)" என்ற நூலாக புலவர்.சிவகுமார் அவர்கள்  மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க  இந்நூலினை தம் சொந்த செலவில் வெளியிட்டார்.   படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் சமுதாய மாற்றம் தேடியுள்ளனர். எனினும் இளம் பருவத்தில் சமூகச் சிந்தனை தோன்றுவது என்பது அரிதான செயல்தான். நூலில் இடம் பெற்றுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் சமூக சிந்தனை,மக்கள் புரட்சி , கல்விச் சிந்தனைகள் , சமுதாய மாற்றம் போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு  ஆண்டும் பெருந்தன்மைத் தமிழாய்வு மன்றமும், பெருந்தன்மை மாத இதழும் நடத்துகின்ற போட்டிகளின் கட்டுரைகளையும் ஆய்வரங்கு நிகழ்வில் தந்த ஆய்வு ஏடுகளையும் அச்சிட்டுக் கொடுக்க உறுதுணையாக நிற்கிறோம். தமிழ் சமுதாயம் இதனை வரவேற்று ஊக்கமும்,ஆக்கமும் நல்குவார்கள் என்றே  நம்புகிறோம். "எல்லாப் புகழும் என் தாய் தமிழுக்கே!"