அறிவு சார்ந்த சிந்தனையில் ஜூலை 2018-ல் நடைபெற்ற தமிழ்த்தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பல ஆய்வாளர்கள் தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். அவர்களின் ஆய்வுகளை யாவும் இன்றைய சமுதாயத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. பகுத்தறிவு செவ்வையாக அமைவதற்கும், அது வளர்வதற்கும் ஐம்பொறிகளும் பழுதின்றி அமைய வேண்டியது அவசியம் ஆகும். அந்தப் பொறிகள் குறித்த கருத்துக்களை ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ஆய்ந்து சமர்ப்பித்துள்ளார்.
ஒருவர் கண்கள் குருடாகவோ அல்லது காதுகள் செய்விடாகவோ இருந்தால் எந்த உணர்வும் இல்லாத இலக்கியம் தான் படைக்க முடியும், அந்த வகையில் சமுதாயத்தில் உள்ள குருடர்களும்,செவிடர்களுக்கும்,ஊமையர்களுக்கும் மிகவும் பக்குவமாக தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த சமூகம் அறிவு வளர்ச்சிக்கு உரியது என்றும் இன்றைய அறிவியல் வளர்ந்த சமூகம் ஒழுக்கச் சீர்கேடான சமூகம் என்றும் சாடி குற்றங்களை பிரதிபலித்துக் காட்டியுள்ளனர் ஆய்வாளர்கள்.
இதனைக் கருதிர்கொண்டாள் சமூகமே அறிவு வளர்ச்சிக்கு உரிய நிலையம் என்பது தெளிவாகிறது. எனவே சமூகத்தைச் சார்ந்த ஒருமனிதன் தன இயற்கை நுண்ணுணர்வாலும், உழைப்பாலும் பெறும் அறிவு, அந்த சமூகம் முழுமைக்கும் உரியதாகிறது.
இன்று அந்த நிலையை எந்தச் சமூகம் பின்பற்றிக் கொள்கிறதோ அதுதான் உயர்வான சமூகம் என்று அறிவிற்சிறந்த படைப்பாளர்கள் கருதுகின்றார்கள். இந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்கள் யாவும் சமுதாயத்தில் ஆழ்ந்துகிடக்கும் சங்கடங்களையும்,அதனால் உண்டாகும் கொடுமைகளையும் கண்டு பேதலித்து நிற்கிறார்கள்.இதனைக் கருத்திற்கொண்டால் அறிவு காலந்தோறும் வளரும் ஒரு திராட்சைக்கொடிக்கு ஒப்பாகும். இதனை தொல்காப்பியர் நெறியாளர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்.
"மக்கள் தாமே ஆறறிவுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!"
- தொல்காப்பியம்:மரபு 33
புலன் அறிவின் அடிப்படையில் மக்களுடன் பிற உயிர்களாகிய புள், விலங்கு இவற்றுடன் சேர்த்து கூறிய நன்னூலாரின் தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்டு நின்ற தொல்காப்பிய நெறியாளர் மக்கள் பிற உயிர்களினும் மேலானது என்று வரையறை கூறிய மாண்பு போற்றுதற்குரியதாகும். அந்த மாண்புடைய மக்கள் வாழ்வியலைப் பகுத்தும் தொகுத்தும் வகுத்தும் சிறுத்தும் தந்த ஆய்வாளர்களின் முயற்சி பாராட்டுக்குரியதாகும். வாழ்க தமிழ்!

Comments
Post a Comment