| பேராசிரியர் சங்கரேஸ்வரி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் முனைவர்.க.அழகர், செயலாளர் புலவர் சிவகுமார் வழங்கினர். உடன் பொருளாளர் கவிஞர் காளீஸ்வரன் இருந்தார். |
மே 2017ல் பெருந்திணை தமிழாய்வு மன்றம் சார்பாக ஏழாம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதில் பல ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை பதிவேற்றுள்ளனர்.
சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இயக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இளகிய ஆய்வப்பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வலர்களின் ஆய்வு பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது.
சமுகமாற்றம் தேடும் மக்களின் உள்ளத்தைப் படம்பிடிக்க இருபத்தோராம் நூற்றாண்டில் பெருந்தமை தமிழாய்வு மன்றம் பேராசிரியர் முனைவர் க.அழகர் அவர்களும், முதுநிலை தமிழாசியர் புலவர் ப.சிவகுமார் அவர்களும், முதுநிலை தமிழாசிரியர் மிடலைக் கவிஞர் பொன்.செல்வராசு அவர்களும், ஆய்வு மேலாண்மை ஆங்கிலப்பேராசிரியர் முனைவர் து.ஜெயலட்சுமி அவர்களும் ஆய்வாளர்களை அழைத்து கட்டுரைகளைச் சாமர்ப்பிக்கச் செய்து அழிந்து வரும் தமிழ்சமுதாயத்தை மேன்மை அடைய செய்ய முயன்ற அறிஞர்களை பாராட்ட நினைத்தோம்.
சங்க காலச் சமுதாய வாழ்வியல் நெறிகள், கற்பின் சிறப்புகள், தொழில் துறையின் மேம்பாடுகள், பண்பாட்டு மூலங்கள் யாவற்றையும் உருவாக்கித் தருவதற்காக இந்த ஆய்வுக் களம் எடுத்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது. ஆனால் சங்க காலத்தின் அடிச்சுவட்டை அறிய இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டு தொகை மட்டும் அல்லாமல் சங்கம் மருவிய காலத்திய திருக்குறளும், காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூட அடிப்படைச் சான்றுகளாக உள்ளன என்பதைக் குறித்து ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை முன்னெடுத்துவைத்துள்ளனர்.
ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகள், நடப்புக் கால நிகழ்வுகள் எனப் பல பார்வைகளில் சிந்தனையாளர்களைத் தூண்டி தம் இலக்கை எட்டி சமுதாய மறுமலர்ச்சிக்கு புதிய கோணத்தில் வித்திட்டுள்ளது பெருந்தமைத் தமிழாய்வு மன்றம்.
நடுநிலை நின்று ஆய்வு செய்த ஆய்வாளர்களின் கருத்துக் கருவூலத்தை நூலாக்கியப் பெருமையோடு தாய்த் தமிழை வணங்குகிறோம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

Comments
Post a Comment