சத்திரபட்டி, ஜனவரி 1, 2026:
புத்தாண்டின் முதல் நாளைக் கல்வி, கலாச்சார ஊடகமாகக் கொண்டாடும் வகையில், சத்திரபட்டி கிளை நூலகம் மற்றும் வள்ளலார் அறக்கட்டளை இணைந்து வாசகர் வட்ட கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக நடத்தின.
புத்தாண்டு தொடக்க விழா:
காலை 11.30 மணியளவில், கலைமகள் படிப்பகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தை, வள்ளலார் தர்மச்சாலையின் வி. பால்கனி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். நூலகர் திருமதி சந்திரகலா அவர்கள் வரவேற்புரை நல்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் தொடங்கின.
சிறப்பு உரைகளால் சிறந்த மேடை:
சிந்தனைத் தமிழன் இதழின் ஆசிரியர் திரு. ப. சிவகுமார், கவிஞர் இரா. காளிஸ்வரன் மற்றும் மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்களின் சொற்பொழிவுகள் வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவம், இலக்கியத்தின் சக்தி மற்றும் கல்வியின் விரிவாக்கம் குறித்து விளக்கமாக அமைந்தன.
புரவலர்கள் சேர்ப்பு விழா: நூலகத்திற்கு உறுதுணை
இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, நூலகத்தின் ஆதரவாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில் ‘புரவலர்கள் சேர்ப்பு விழா’ நடைபெற்றது. இதில் ஐந்து புதிய உறுப்பினர்கள் புரவலர்களாக இணைந்தனர். நூலகத்தின் வளர்ச்சிக்காகத் தலைவர் திரு. பால்கனி ₹10,000/- வழங்கினர். மேலும், ஏ.ஜே. கல்லூரி பேராசிரியர் திரு. ஆ. பாலு, அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் திரு. முத்துக்குருபாக்கியம் மற்றும் வாசகர் வட்ட பொருளாளர் திரு. குருசாமி ஆகியோர் தலா ₹1,000/- வழங்கி, மொத்தம் ₹3,000/- நன்கொடையாக அளித்தனர்.
புத்தாண்டு வாழ்த்து மற்றும் நினைவுப் பரிசுகள்:
புத்தாண்டு விழாவையொட்டி, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. மேலும், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல்:
திரு. முத்துக்குமார், திரு. ப. ராமர், திரு. அ. கலசலிங்கம் உள்ளிட்ட வாசகர் வட்டத்தின் பல உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, நூலக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நன்றியும், எதிர்நோக்கும்:
நிகழ்ச்சையின் முடிவில்,இராஜபாளையத்தைச் சேர்ந்த BSNL பொறியாளர் திரு. பொன்ராஜ் நன்றியுரை வழங்கினார். வாசிப்பு பண்பாட்டை வலுப்படுத்தும் இத்தகைய கூட்டுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment