58வது ஆண்டு நூலக நிறைவு விழா இராஜபாளையம் அரசு பொது நூலகத்தில் 07.11.2025 அன்று நடைபெற்றது. இதில் நூலகர் சண்முக வேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் க.அழகர், கவிஞன் பதிப்பக உரிமையாளரும் வாசகர் வட்ட செயலாளருமான சிவகுமார், பொருளாளர் காளீஸ்வரன் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நூலகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. நன்றியுரை நூலகர் சங்கரியம்மாள் அவர்கள் கூறினார்கள்.
புலவர் ப.சிவகுமார் அவர்கள் எழுதிய ' உழவர் பிள்ளைத்தமிழ் ' சிற்றிலக்கிய நூல் வெளியீட்டு விழா 26.04.2025 அன்று அரசு பொதுநூலகம் இராஜபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நூலை திரு.பெரி.சந்திரசேகர் (UCO வங்கி முதுநிலை மேலாளர்) வெளியிட அதனை திரு.எஸ்.ஆதிநாராயணன் (மேனாள் துணை ஆட்சி தலைவர்) பெற்றுக்கொண்டார். திரு.சுப்பிரமணியன் (சாலியர் மலர் ஆசிரியர்) முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு கவிஞன் பதிப்பகம்.